அழுதபடியே தாயின் மடிக்கு சென்ற 2 வயது சிறுமி..! திடீரென இதயத்துடிப்பு நின்று சடலம் போல் சரிந்த பகீர் நிகழ்வு! பதற வைக்கும் வீடியோ உள்ளே!

அரிசோனா: தாயின் கரங்களில் 2 வயது குழந்தை துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மெஸா பகுதியை சேர்ந்தவர் பெத்தானி டேவிஸ். 31 வயதான இவருக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சில நாள் முன்பாக, கையில் தூக்கி, பெத்தானி கொஞ்சியுள்ளார். இதனை வீட்டின் மூலையில் ஒரு கேமிரா வைத்து, வீடியோவாக படம்பிடித்துள்ளார்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில், கையில் கொஞ்சியபடி இருந்த குழந்தை திடீரென கை, கால்கள் சுணங்கியபடி, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த காட்சிகள் அப்படியே வீடியோ கேமிராவில் பதிவாகின. பெத்தானி பெரும் அதிர்ச்சியில் உறைந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.  

இந்த குழந்தைக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்த நிலையில், அதற்கான சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.