விடாமல் துரத்திய மரணம்! விபத்த்ல் சிக்கி ஆம்புலன்சில் சென்று மீண்டும் விபத்து! 8 பேர் பலி!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கார் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த மீன் ஏற்றி வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்சில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தம்பி பகுதியில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பவாஸ் ,நாசர், உமர் பாரூக் ஆகியோர் தங்களது காரில் நெல்லியம்பதி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது சுமார் 3 மணி அளவில் அவர்களது கார் மரப்பாலம் அருகே செல்ல  நிலைதடுமாறி அங்கு இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அவர்களுக்கு பலமாக காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஒரு வேன் மூலம் அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்றும் விபத்தில் காயம் பட்டவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சுகாதார நிலையத்தில் அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்த நிலையில் விபத்தில் காயம் பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். 

இந்நிலையில் எதிரே மீன் ஏற்றிவந்த லாரி ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதியது இந்நிலையில் ஆம்புலன்சில் இருந்த எட்டு பேர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுதிர் குற்றம் அவரது  உதவியாளர்கள் மூவர் மற்றும் காயமடைந்த நான்குபேர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து விபத்தில் காயம் பட்டவர்களை இன்னொரு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காண வி.கே சித்தார்த்தன் நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம் பி ராஜேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.