இந்தியாவில் அமேசான் திறந்த பிரமாண்ட அலுவலகம்! ஒரே நாளில் 15,000 பேருக்கு வேலை! 1.55 லட்சம் பேர் தேவையாம்!

ஐதராபாத்: அமேசான் அலுவலகம் ஐதராபாத்தில் பிரமாண்டமான அலுவலகத்தை திறந்துள்ளது. இதில், 15,000 ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது.


அமேசான் நிறுனவனம், ஆன்லைன் வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், தனது இந்திய வர்த்தகத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது. இதற்காக, ஐதராபாத் நகரில் பிரமாண்டமான அலுவலகத்தை நிறுவியுள்ளது.

இந்த அலுவலகம் , சுமார் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் பொருட்செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்பாட்டிற்காக, கடந்த புதன்கிழமை அமேசான் நிறுவனம் சேவைப் பணிகளுக்காக திறந்துள்ளது. இந்தியாவிலேயே இந்நிறுவனத்திற்கு நிறுவப்பட்டுள்ள முதல் சொந்த அலுவலகம் இதுதான்.

இதனை இந்திய தலைமையிடமாக மாற்றி செயல்படுத்த, அமேசான் தீர்மானித்துள்ளது. இதில் சுமார் 15,000 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதுதவிர, இந்திய அளவில் மற்ற நகரங்களிலும் சேர்த்து நேரடியாக, 62,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும், மறைமுகமாக, 1.55 லட்சம் பேர் இந்தியா முழுவதும் அமேசான் நிறுவனத்திற்கு பணிபுரிகிறார்கள். ஐதராபாத் அலுவலகம் திறந்ததுபோல, மேலும் புதிய இடங்களில் டெலிவரி சென்டர்களை தொடங்க உள்ளதாகவும், அமேசான் குறிப்பிட்டுள்ளது.