நான் வேற்றுகிரகவாசி! எலியன்! 200 வருடம் வாழ்வேன்! நித்யானந்தா வெளியிட்ட ரகசியம்!

தன்னை ஏலியன் எனக்கூறும் நித்தி 200 வருடங்கள் வாழப்போவதாக பேச்சு.


ஆன்மீகவாதிகளில் அடிக்கடி தலைப்பு செய்தியாக வந்து போகும் நித்தியானந்தா தான் ஒரு ஏலியன் என்றும் 200 ஆண்டு காலம் இந்த பூலோகத்தில் வாழப் போவதாகவும் தெரிவித்தது அவரது பக்தர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆன்மீகத்தையும் தாண்டிஅறிவியல் ஆராய்ச்சி செய்துள்ள நித்தியானந்தா ஐன்ஸ்டீன் விதிகள் தவறு என்ற ஒரு புது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். தன்னுடைய உடலை 200 ஆண்டுகள் இயக்க முடிவெடுத்துள்ளதாக கூறும் நித்தியானந்தா குறைந்த பட்சம் 160 ஆண்டுகளாவது வாழ்வேன் என கூறியுள்ளார்.

உலகத்தில் பல்வேறு சக்திகள் இருப்பதாக கூறும் நித்தியானந்தா இந்த ஆன்மீகத்தை ஏலியன்களுக்கும் வழங்க முடியும் என தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஏலியன்களின் ஆயுட் காலம் 1,260 ஆண்டுகள் என்றும் பிளானட் எர்த், கட்டுமானம், ஏலியன் வாழ்க்கை பாதுகாப்பு பிரபஞ்சம் குறித்து நித்தியானந்தா பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

அறிவியல் விதிகளை தந்த ஐன்ஸ்டீன் விதிகள் அனைத்தும் தவறு என கூறும் நித்தியானந்தா E=Mc2 என்ற விதி முற்றிலும் தவறான என கூறி ஒரு பரபரப்பான விஷயத்தை கூறியுள்ளார். மேலும் விலங்குகளை பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கி உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்த நித்தியானந்தா குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளை விரைவில் பேச வைப்பேன் என சபதம் எடுத்துள்ளார்.

அது மட்டுமல்ல இது குறித்த பரிசோதனைகள் நிறைவு பெறும் தருவாயில் இருப்பதாகவும் ஆங்கிலம் அல்லது தமிழில் வன விலங்குகளை பேச வைப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்து மதத்தில் சைவத்தில் வேத ஆமாஸ்களில் அனைத்து விதமான அறிவியலும் இருப்பதாகவும் அதில் பல்வேறு விதமான அறிவியல் சார்ந்து இருப்பதாகவும் சனாதான இந்து தர்மம் அறிவியலையும் கொண்டுள்ளது என்று சுவாமி நித்தியானந்தா கூறியுள்ளார்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசும் நித்தி என செல்லமாக அழைக்கப்படும் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு, திருவண்ணாமலையில் ஆசிரமங்கள் உள்ளது. ஆன்மீகம் தொடர்பான செய்திகளை கூறும் நித்தியானந்தாவின் பேச்சுக்கு மயங்கி பலர் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர்.

நித்தியானந்தாவை பற்றி இவ்வளவு தகவல் தெரிவித்தும் ஒரு வரி கூட ரஞ்சித்தாவை பற்றி இல்லையே என கேட்க வேண்டாம். நித்தியானந்தா தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி முடிவில் அவரைப் பற்றி எந்த தகவலும் கூறவில்லை.