கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி! தலித் கட்சி அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக வட மாவட்டத்தை சேர்ந்த தலித் கட்சி ஒன்று அறிவித்துள்ளது.


இந்திய குடியரசு கட்சி என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். செகு தமிழரசன் என்பவர் இந்தக் கட்சியின் தலைவராக உள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் செகு தமிழரசனுக்கு வேலூர் கீழ் வைத்தியநாங்குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. 

அந்தத் தொகுதியில் போட்டியிட்டு சேர்க்கும் தமிழரசன் வெற்றி பெற்றார். அதன் பிறகு அவரும் சரி அவரது கட்சியும் சரி பெரிய அளவில் பேசப்படவில்லை. 

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் செகு தமிழரசனை ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட திமுகவும் சரி அதிமுகவும் சரி தமிழரசன் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

இதனால் வேறு வழியே இல்லாமல் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியுடனான கூட்டணியில் செகு தமிழரசன் இணைந்துள்ளார். சென்னையில் கமலை சந்தித்து தமிழரசன் கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பிறகு அறிவிக்கப்படும்.