முழுக்க முழுக்க பெண்கள் ராஜ்ஜியம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 33


ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் அம்மா உணவகம் தொடங்க வேண்டும் என்று திட்டம் தீட்டியதும் ஒரே ஒரு விஷயத்தில் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதாவது, அம்மா உணவகத்தில் முழுக்கமுழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

எதற்காக பெண்களிடம் இந்த பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டபோது நிதானமாக விளக்கம் கொடுத்தார். ‘’நாம் ஏழைகளின் பசி தீர்க்கும் உன்னதமான திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம். உணவு சாப்பிட வருபவர்களுக்கு தாய்மை உள்ளத்துடனும் மனம் நிறைந்த அன்புடனும் உணவு தயார் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதோடு உணவு பரிமாறுவதற்கு பொறுமையும், அக்கறையும் இருக்க வேண்டும். இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

ஆண்களிடம் நேர்த்தியும் வேகமும் இருக்கும் என்றாலும் பெண்கள் அளவுக்கு அன்பு, அக்கறை பொறுமை இருக்காது. எனவே, அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட வருபவர்களிடம் எந்த பாகுபாடும் காட்டாமல் அன்பு செலுத்துவதற்கு பெண்களால் மட்டுமே முடியும்’’ என்று விளக்கம் கொடுத்தார்.

மேயர் சைதை துரைசாமியின் எண்ணப்படி அம்மா உணவகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க பெண்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து பெண்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இட்லிக்கு மாவு ஆட்டுவது தொடங்கி, காய் நறுக்குவது, சாம்பார் செய்வது, பில் போடுவது, காசு வாங்குவது, சாப்பாடு பரிமாறுவது, சாப்பிட்ட தட்டை எடுப்பது, கழுவுவது என அனைத்து வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. எங்கெங்கும் பெண்கள் இருந்தால் தான் சாப்பிட வருபவர்களுக்கு, வீட்டில் உணவு உண்ணும் உணர்வு கிடைக்கும் என்பதும் சைதை துரைசாமியின் சிந்தனை.

இதில் இன்னொரு பிரச்னை உருவானது.

- நாளை பார்க்கலாம்.