400 கிலோ மீட்டர் நடந்துவந்த பெண்கள் கைது. இதுதான் எடப்பாடி போலீஸ் லட்சணமா?

வன்முறையற்ற போதை இல்லாத தமிழகம் அமைப்போம்’ என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கிலோ மீட்டர் நடைபயணத்தை கடந்த நவம்பர் 25-ந்தேதி தொடங்கினார்கள்.


கடலூர் மாவட்டம் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து தொடங்கிய இந்த நடை பயணத்தில் 300-க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர். இன்று காலை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தாம்பரத்தில் இருந்து பேரணியாக கோட்டைக்கு சென்று, முதல்- அமைச்சரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினார்கள்.

இன்று காலை நடை பயணம் வந்த ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கோட்டை நோக்கி செல்வதற்குத் தயாரானார்கள். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி ஊர்வலம் செல்ல முடியாது என்றனர். ஆனால், தடையை மீறி ஊர்வலம் செல்ல தயாரான அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். 

உடனே ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைதுக்கு அச்சப்படும் மாதர் நாங்கள் அல்ல என்று பெண்கள் ஒட்டுமொத்தமாக போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார்கள். ஏனென்றால் போராளிகளுக்கு கைதும், சிறையும் புதிதல்ல.

400 கி.மீ. நடந்துவந்த பெண்களிடம் அமைச்சரே நேரில் வந்து மனுவை வாங்கியிருக்கலாம். அப்படிப்பட்ட அரசா நம்மிடம் உள்ளது.