நள்ளிரவில் கொட்டிய பண மழை! வீடு தேடி வந்து கொடுத்துச் சென்ற அரசியல் கட்சியினர்! வாக்காளர்கள் ஹேப்பி!

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதலே பண மழை பொழிய ஆரம்பித்துள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பணம் கொடுத்து வாக்காளர்களை கவரும் பணியில் மூன்று முக்கிய கட்சிகளுமே ஈடுபட தொடங்கி உள்ளன. அதிலும் குறிப்பாக நேற்று தேர்தல் பிரச்சாரம் இந்த நிலையில் மூன்று முக்கிய கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பணியில் அமர காட்டத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு திடீரென மின்சாரம் தடைபட்டது.

இதனை பயன்படுத்தி பிரதான கட்சி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அதே சமயத்தை பயன்படுத்தி மற்ற இரண்டு கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணத்தை வினியோகிக்க ஆரம்பித்தனர். இதனால் ஒரே வீட்டிற்கு நேற்று 3 கட்சியினர் மாறி மாறி வந்து பணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றதாக கூறுகிறார்கள். பிரதான இரண்டு கட்சிகள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 

அதேசமயம் மூன்றாவதாக இருக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியை வாக்காளர்களுக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வினியோகம் செய்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். பணம் விநியோகிக்கும் போது மற்ற இரண்டு கட்சியினரும் கையும் களவுமாக சிக்கவில்லை. ஆனால் சென்னை ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தினகரன் கட்சியினர் பணம் விநியோகித்த போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று இரவுக்குள் வாக்காளர்களில் சுமார் 50 சதவீதத்தினருக்கு பணத்தை வினியோகம் செய்து விடவேண்டும் என்று பெரிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதேபோல் பணம் கிடைக்காதவர்களும் தங்களுக்கு எப்போது பணம் வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்