அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் புகழ் ஸ்டேண்டப் காமடியன் ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?

இனையத்தில் லேட்டஸ் சென்சேஷன் அலெக்ஸ்!.


அலெக்ஸ் இன் வொண்டர் லேண்ட் என்கிற பெயரில் ஏ.ஆர். ரகுமான் முதல இளையராஜா பாடல்கள் வரை கலந்துகட்டி கலாய்க்கும் அலக்ஸ் 2005லேயே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.அலெக்ஸ் நடித்த அந்தப் படத்தின் பெயர் 'நஞ்சுபுரம்'.சார்லஸ் என்பவர் இயக்கிய அந்தப் படத்தின் இயக்குநர் சார்லஸ்.ரஜினியின் எந்திரன் படம் நினைவிருக்கிறதா?.

அதில் சத்தமாகப் பாட்டு வைத்து ஐஸ்வர்யா ராயின் படிப்புக்கு சத்தமாக பாட்டு வைத்து இடைஞ்சல் செய்யும் இளைஞராக நடித்த ராகுல்தான் நஞ்சுபுரம் படத்தின் நாயகன்.அந்தப் படத்தின் கதைவசனகர்த்தா பிரபல கவிஞர் மகுடேசுவரன்.காமெடியனாக நடிக்க விரும்பிய அலெக்ஸ் அந்தப் படத்தில் செகண்ட் ஹீரோ லெவலில் ஒரு திருடனாக நடித்திருப்பார்.

அந்த சமையத்தில் பெங்களூரில் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்த அலெக்ஸ் படப்பிடிப்பு இடை வேளையில் மொத்த குழுவையும் எண்டர்டெயின் செய்திருக்கிறார். நன்றாகப் பாடவும்,மிமிக்கிரி செய்யவும் கற்றிருந்த அலெக்ஸ் எதாவது கேள்விகேட்டால் அதை கமலஹாசன்,சிவாஜி,தேங்காய் சீனிவாசன் என்று பல குரல்களை கலந்து கட்டித்தான் பதில் சொல்வாராம்.

நஞ்சுபுரம் படம் மொத்தமுமே ஒரு காட்டுப் பகுதியில் பாம்புகளுக்கு பயந்து வாழும் ஒரு கிராம மக்களின் கதை என்பதால் , அந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தமுமே தேனி பெரியகுளம் பகுதியில்தான் நடந்திருக்கிறது. அப்போது தன்னோடு லாட்ஜில் தங்கி இருக்கும் சக நடிகர்கள் இயக்குநர்,கவிஞர் மகுடேசுவரன் போன்றோரிடம் ' என்னப்பூ குளிக்க போறீங்களா,சுடுதண்ணி வராதே,எப்படி வரும்?,நம்ம பய ஹீட்டர் போட்டாத்தான வரும்' என்று தேவர் மகன் சிவாஜி குரலில் கேட்பாராம்.

ஆனால் அப்போதே,ஒரு நாள் நான் ஐ.டி வேலையை விட்டு ஜெயிப்பேன் என்று சொல்வாராம் அலெக்ஸ். இப்போது ஸ்டேண்டப் காமெடியில் மாபெரும் வெற்றி பெற்று உலக தமிழர்களால் கொண்டாடப் படும் நாயகனாகி விட்டார் அலெக்ஸ்.உலகம் முழுவதும் அலெக்ஸ்க்கு இப்போது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நஞ்சுபுரம் படத்தின் இயக்குநர் சார்லஸ்,நாயகன் ராகவ் எல்லாரையும் விட இன்று உலகத் தமிழர்களை,தன் தங்லீஷ் காமெடியாலும் மிமிக்கிரியாலும் வென்று விட்டார் அலெக்ஸ்.அவர் நடித்த ஒரே ஒரு தமிழ் படமான நஞ்சுபுரம் திரையரங்குகளில் பெரிதாக சாதிக்கவில்லை,தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 500 தடவை ஒளிபரப்பு ஆகி விட்டது.

அனேகமாக அடுத்த ஒளிபரப்பின் போது,ராகவை விட்டு விட்டு அலெக்ஸ் இன் வொண்டர் லேண்ட் புகழ் , அலெக்ஸ் நடித்த 'நஞ்சுபுரம்' என்று புரொமோகள் வரலாம்