மகளின் மரணத்தை நினைத்தே செத்திருப்பார் அல்பெர்டோ! கண்ணீரில் உலகம்!

தந்தையும் மகளும் பிணமாக கரையில் ஒதுங்கியிருக்கும் ஒற்றைப் புகைப்படம் இன்று உலகையே கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது.


மத்திய அமெரிக்க நாடான எல்.சால்வடாரைச் சேர்ந்தவர் அல்பெர்டே. இவர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக, அந்நாட்டு அதிகாரிகளிடம் வேண்டினார். ஆனால், அவர்கள் நிராகரித்துவிட்டனர். தன்னுடைய நாட்டில் பணம் சம்பாதிப்பது போதுமானதாக இல்லை, அமெரிக்காவுக்குப் போனால் நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணினார். அவரது மனைவி தடுத்திருக்கிறார். ஆனாலும் அதனால் தனது இரண்டு வயது மகளுடன் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டார். நான் போய் சேர்ந்ததும் உன்னை பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறேன் என்று கூறி கிளம்பியிருக்கிறார் அல்பெர்டே.

தன் இரண்டு வயது குழந்தையை பனியனுக்குள் அணைத்தபடி ஆற்றைக் கடக்க முயன்றபோது, நீரில் தாக்குப்பிடிக்க முடியாமல் குழந்தைக்கு மூச்சுத்திணறி கண் எதிரே மரணம் அடைந்திருக்கிறது. அதன்பிறகு நீந்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அல்பெர்டேவும் முயற்சியைக் கைவிட, இருவரின் பிணமும் கரை ஒதுங்கியிருக்கிறது. மரணத்திலும் தன் தந்தையின் கழுத்தைக் கட்டியபடி இறந்து கிடக்கும் அந்த இரண்டு வயது குழந்தைக்கு என்னென்ன கனவுகள் இருந்தனவோ..? அதன் மரணத்தைக் கண்டு தந்தை எப்படித் துடித்திருப்பானோ...?