அஜித் பிறந்த நாள் தள்ளுபடி செய்தி! கப்ஸா ரொம்ப ஓவராத்தான் போகுது!

அடப் பார்றா, இது எப்படி நடந்துச்சு என்று அஜித் ஆச்சர்யப்படும் செய்தி ஒன்று தமிழகத்தில் உலா வருகிறது. அதுவும் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு செய்தியாக உலவும் இந்த செய்தியைக் கண்டு அஜித்தே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.


ஆம், சமீபத்தில் புல்வாமா தாக்குதல் நடந்தது அல்லவா? அந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் மரணம் அடைந்தனர். அந்த 40 பேர் குடும்பத்துக்கும் அஜித் தலா 1 கோடி ரூபாய் உதவி செய்திருக்கிறாராம். அப்படி உதவி செய்துவிட்டு, அதை வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாராம்.

இதைப் பற்றி எப்படியோ (?) தெரிந்துகொண்ட தல ரசிகர், இந்த விவகாரத்தை ரகசியம் போன்று தீவிரமாகப் பரப்பி வருகிறார். இது, அங்கே சுற்றி, இங்கே சுற்றி கடைசியில் அஜித் காதுக்கே போக, அதிர்ந்துவிட்டாராம். நான் சும்மா இருந்தாலும், ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டேங்கிறாங்களே என்று டென்ஷன் ஆனாராம்.

நல்ல விளம்பரம்தானே ஜமாயுங்க தல....