வீரமரணம் அடைந்த விமானப்படை வீரர்! நாட்டை காக்க களம் இறங்கிய அவரது மனைவி! நெகிழ வைக்கும் சம்பவம்!

பெங்களூரில் விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் மனைவி புதிதாக விமானப்படையில் இணைந்துள்ளார்.


பெங்களூரில் கடந்த பிப்ரவரி மாதம் மிராஜ் 2000 வகை போர் விமானத்தில் விமானப்படை ஸ்குவாட்ரான் லீடர் சமீர் அப்ரால் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சமீர் பலியானார்.

கணவன் சமீர் நாட்டுக்காக தன் உயிரை இழந்த நிலையில் அவரது மனைவியும் நாட்டுக்காக தன்னுடைய சேவையை வழங்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து விமானப்படையில் அதிகாரியாகும் தேர்வில் பங்கேற்ற அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது கரிமா அப்ரோல் தெலுங்கானாவில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

அடுத்த ஆண்டு அவர் விமானப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளார். கணவர் உயிரிழந்ததால் துவண்டு போகாமல் விடா முயற்சியுடன் கரிமா அப்ரோல் விமானப்படையில் இணைந்துள்ளார். இந்த தகவலை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. 

கணவன் இறந்து ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மனைவி கரிமா விடா முயற்சியுடன் நாட்டுக்காக சேவையாற்ற விமானப்படையில் இணைய உள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.