புறப்பட்ட சில நிமிடங்கள்..! 100 பேருடன் 2 மாடி கட்டிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்! அடுத்தடுத்து மீட்கப்படும் சடலங்கள்! பதைபதைக்க வைத்த விபத்து!

கஜகஸ்தான் நாட்டில் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.


கஜகஸ்தான் நாட்டில் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து நரசூழ்தான் நோக்கி காலை 7 மணியளவில் சென்ற விமானம் ஒன்று அருகே இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இந்த விமானத்தில் 95 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என 100 பேர் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  

இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. விமானத்திலிருந்து அவசர உதவி எண்ணிற்கு பெண் ஒருவர் அழைத்து இது குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.