மாநிலங்களவையில் ஏப்ரலில் தமிழகத்திற்கு 6 இடங்கள் காலியாகிறது. இவற்றில் சட்டசபையில் இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட சம பலம் இருப்பதால், இரண்டு கட்சியினருக்கும் மூன்று இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
திருச்சி சிவாவுக்கு மீண்டும் பதவி கிடையாதா..? தி.மு.க. மாநிலங்களவை தேர்தல் நிலவரம்.

அ.தி.மு.க.வில் அந்த மூன்று தொகுதிக்கும் தம்பிதுரை, அன்வர்ராஜா, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கட்டி உருண்டு வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க.வில் யாருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் மூத்த எம்.பியான திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு கிடையாது என்றே சொல்லப்படுகிறது.
இப்போது கிடைத்திருக்கும் தகவல்படி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா ஆகிய இருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னொரு தொகுதி யாருக்கு என்பதில்தான் இழுபறி நீடிக்கிறது.
திருச்சி சிவாவுக்கு அந்தப் பதவியை கொடுக்கக்கூடாது என்று தி.மு.க.விலே போட்டி நிலவி வருகிறது. தொடர்ந்து எத்தனை காலம் ஒரே நபருக்கு பதவி வழங்குவீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவதால் திருச்சி சிவாவுக்கு பதவி கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.