மீண்டும் முதலமைச்சர் பதவி! காய் நகர்த்தும் ஓபிஎஸ்!

மீண்டும் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் காய் நகர்த்தத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேனியில் மட்டும் 500 கோடி ரூபாய் செலவு செய்து பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஒன்றை மட்டுமே காரணமாக வைத்துக் கொண்டேன் மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்றனர் பன்னீர்செல்வம் திட்டம் தீட்டி வருவதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தை ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதலமைச்சராக ஆக்குவதாக கூறித்தான் பாஜக மேலிடம் துணை முதலமைச்சர் ஆக்கியதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். தற்போது மிருக பலத்துடன் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்து உள்ளதால் அவருடன் நெருக்கமாக இருக்கும் பன்னீர்செல்வம் எடப்பாடியை கவிழ்த்துவிட்டு முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி குறித்து விசாரித்தபோது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் பதவி மீது துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் மிகுந்த ஆசைகள் உள்ளதாகவும் அதன் அடிப்படையில் தான் அடிக்கடி டெல்லி வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அண்மையில் வாரணாசி சென்ற பிரதமர் மோடிக்கு தேர்தல் பணியாற்றிய போதும் கூட தமிழகத்தில் முதலமைச்சர் பதவியை தனக்கு தர வேண்டும் என்று அங்குள்ள சிலரிடம் வெளிப்படையாகவே ஓபிஎஸ் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது அதிமுக தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளதால் அதற்கு எடப்பாடியை காரணமாக்கி மீண்டும் முதலமைச்சராக ஓபிஎஸ் நகர்த்துவதாக பேச்சு அடிபடுகிறது.