விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தடை? கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள், கண்டுகொள்ளாத அ.தி.மு.க.!

விடுதலைப்புலிகளான தாயகமான இலங்கையில் இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிந்துவிட்டது. புலம் பெயர்ந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இப்போது சிங்கள அரசுக்கு எதிரான போராட்டங்களில் இறங்குவது இல்லை. அதுவும், சமீபத்தில் தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு விடுதலைப்புலிகள் மீது இலங்கை மக்களுக்கு மரியாதை அதிகரித்துள்ளது.


இந்த நிலையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க பல்வேறு முயற்சிகள் எடுப்பதாகக் குறிப்பிட்டு, விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதனால் இன்றைய சூழலில் விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் 2024ம் ஆண்டு வரை தடை இருக்கிறது.

இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட்டது மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது தமிழ் தேசிய இயக்கத்தினர் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்தியாவில் ஏராளமான இனவாத, மதவாதக் குழுக்கள் இயங்கிவருகின்றன. பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நடக்கிறது. அவர்களுக்கு எல்லாம் தடை போடாமல், விடுதலைப் புலிகள் மீது மட்டும் தடை போடுவது நியாயம் அல்ல என்று கொந்தளித்துள்ளனர். இந்தத் தடை விலகினால் விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செய்வதும், வெளிநாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வந்து செல்வதும் முடியும். ஒட்டுமொத்தமாக ஆப்பு வைத்த மோடி மீது கோபமாகத்தான் உள்ளனர். 

இந்தத் தடையை விலக்குவதுதான் வீரத் தமிழ் புலிகளுக்கு நாம் செய்யும் மரியாதை. இதற்கெல்லாம் நம் அடிமை அ.தி.மு.க.வினர் குரல் கொடுத்தால் நல்லது. ஏழு பேர் விடுதலையையே கண்டுகொள்ளாதவர்கள், இதற்குத்தானா குரல் கொடுப்பார்கள்..?