காசு இல்லனா காதலி கூட மதிக்க மாட்டா! புது மாப்பிளை எடுத்த விபரீத முடிவு! வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பரிதாபம்!

திருமணம் நிச்சயமாகி அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காசு இல்லாவிட்டால் மதிப்பில்லை என்ற தகவலைபதிவிட்டுவிட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மன்சூர். ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமான நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திருமணத்தை நடத்த வேலைகளும் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிய மன்சூர், தன்னுடைய அறைக்குள் உறங்கச் சென்ற நிலையில் மறுநாளை காலையில் வெகுநேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படவில்லை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், மன்சூரின் செல்போனை ஆய்வு செய்த போது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் துட்டு, இல்லன்னா யாரும் நம்மள மதிக்க மாட்டாங்க. ஸோ இந்த லைஃப்புக்கு குட்பை டியர் ஐ லவ் யூ என்ற வாசகம் இருந்தது

இதையடுத்து மன்சூரின் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது மன்சூர் இதே கருத்தை அவர்களிடமும் கூறியது தெரிய வந்தது. இதையடுத்து பண ரீதியாக மன்சூரின் மனம் வேதனையடையும் வகையில் ஏதோ சம்பவ நடந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாக பெண் ஒருவரை மன்சூர் காதலித்து வந்துள்ளார். அவருடன் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஆனால் திருமணத்திற்கான செலவு விவகாரத்தில் காதலியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் மன்சூர் திடீரென வேலையை இழந்ததாகவும் கூறுகிறார்கள். இதனால் காதலியுடன் மன்சூருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

அதனால் தான் காசு இல்லனா நம்மை யாரும் மதிக்கமாட்டாங்க என்று மன்சூர் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.