நாற்பது வயதில் பெண்களுக்கு நாய்க் குணம் வந்துவிடும் என்பது ஏன் தெரியுமா?

நாற்பது வயதைத் தொட்டுவிட்ட பெண்கள் காரணமில்லாமல் எரிந்து விழுதல், கோபப்படுதல், ஆத்திரம் அடைதல், பதட்டம் அடைதல், தூக்கமின்மை போன்ற பல பிரச்னைகளுக்கு ஆளாவது உண்டு. இதற்குக் காரணம் மொனோபாஸ் காலம் என்பதுதான். இப்போது பெண்களில் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் அளவு குறைகிறது. இந்தக் குறைபாட்டை நீக்குவதற்கு ஹார்மோன் சிகிச்சை கொடுப்பதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கமுடியும்.


* மாதவிலக்கு குளறுபடியாவதே முதல் அறிகுறி. இந்த காலகட்டத்தில் அதிக பால் அருந்துவதால் கால்சிய இழப்பை சரிக்கட்ட முடியும். நடைபயிற்சி, நீச்சல் போன்ற மென்மையான பயிற்சிகள் மேற்கொள்வதும் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

* 30 சதவிகிதப் பெண்களுக்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பல்வேறு குழப்பங்களை உருவாக்குகின்றன. மற்றவர்கள் இயல்பாகவே மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.

மெனோபாஸ் காலத்தை விரும்பி வரவேற்க பெண்கள் முன்வர வேண்டும். இதன் காரணமாக வேறு எந்த இழப்பும் கிடையாது என்பதை நம்ப வேண்டும். மாதாந்திர விலக்கு, எதிர்பாராத கர்ப்பம் போன்ற பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நிம்மதியுடன் பெண்கள் மெனோபாஸ் காலத்தை வரவேற்க வேண்டும்.