ஆயிஷா மீரா வழக்கு! 11 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்படும் உடல்! அதிர வைக்கும் காரணம்!

விஜயவாடா: ஆயிஷா மீரா வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பின் மறு பிரேத பரிசோதனை செய்ய சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 2007ம் ஆண்டு ஆந்திர மாநிலம், விஜயவாடாவின் இப்ராகிம்பட்டிணம் மகளிர் விடுதியில் தங்கியிருந்த ஃபார்மசி படித்த மாணவி ஆயிஷா மீரா, குளியலறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதன்பேரில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2018ம் ஆண்டில் இந்த வழக்கு தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, சிறப்பு விசாரணைக்குழு ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. 

இதன்பேரில் ஆயிஷாவின் பெற்றோர் மேல்முறையீடு செய்யவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, ஆயிஷாவின் உடலில் மறு பிரேத பரிசோதனை செய்ய, சிபிஐ அனுமதி கோரியுள்ளது.

இந்த கொலையை முன்னாள் துணை முதல்வர் கொனேரு ரங்கா ராவ் மகன் கொனேரு சதீஷ் செய்திருக்கலாம் என, ஆரம்பம் முதலே சந்தேகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் சத்யம் பாபு என்பவரை குற்றவாளியாக உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டு அந்த நபர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.

கொனேரு சதீஷ் தனது அரசியல் செல்வாக்கை  பயன்படுத்தி தப்பித்து வருகிறார் என்றும், அவருக்கு உரிய தண்டனை பெற்று தருவோம் என்றும் ஆயிஷாவின் பெற்றோர் நம்பிக்கையுடன் குறிப்பிடுகின்றனர்.