கொத்து கொத்தாக செத்து ஒதுங்கிய திமிங்கலங்கள்! பீதியில் கடற்கரையோர மக்கள்!

ஆப்பிரிக்காவின் கேப் வெர்டேவில் கடற்கரையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள போவா விஸ்டா தீவுப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் கொத்துக் கொத்தாகக் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் மர்மமாக இருந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவென்று தெரியாமல் விஞ்ஞானிகள் இறந்த திமிங்கலங்களின் உடலை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த அனைத்து திமிங்கலங்களுமே லெமன் தலைவகை திமிங்கலங்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் சுமார் 134 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றும் இதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை.  

பொதுவாக காலநிலை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடலில் உள்ள திமிங்கலங்கள் மற்றும் டால்பின் போன்ற வகை உயிரினங்கள் இறப்பது வழக்கம் ஆனாலும் இந்த மாதிரியாக ஒரே வகை உயிரினம் நூற்றுக்கணக்கில் இறந்துபோனது என்னவென்று யூகிக்க முடியாமல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். கூடிய விரைவில் இதற்கான காரணம் என்னவென்று வெளியிடப்படும் என நிர்வாகக்குழு இயக்குனர் தெரிவித்துள்ளார்.