ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அடேங்கப்பா! ஒரே போட்டியில் இவ்வளவு சாதனையா ! அசத்தும் ஆப்கானிஸ்தான்
முதலில்
பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 278 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஹஸ்றதுல்லா அஸ்சை 62 பந்துகளில் 162 ரன்களை குவித்து ரன் மழை பொழிந்தார். அவருடன் களமிறங்கிய உஸ்மான் ஹானி 73 ரன்களை
எடுத்தார்.
பின்னர்
களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரில்லிங் 91 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கெவின் ஓ பிரைன் 37 ரன்களை
எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால்
அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 84 அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் பல சாதனைகளை புரிந்தனர்.
ஆப்கானிஸ்தான்
அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 236 ரன்களை சேர்த்தனர். இதுவே T20 போட்டிகளில் சிறந்த பார்ட்னெர்ஷிப் ஆகும். ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் 278 ரன்களை குவித்தது. இதுவே T20 போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிக ரன்களாகும்.
இந்த
போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 22 சிக்ஸர்களை அடித்தது. அதிக சிக்ஸர்களை போட்டியில் எடுத்த அணி என்ற சாதனையையும் இந்த அணி செய்துள்ளது. மேலும் தனி பேட்ஸ்மேனாக ஹஸ்றதுல்லா அஸ்சை 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். T20 போட்டியில் அதிக சிக்ஸர்களை ஒரு போட்டியில் அடித்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.
இது
போன்று பல சாதனைகளை இந்த
போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி செய்துள்ளது.