பூஜை, புனஸ்காரத்தில் ஊருக்கு மட்டும்தான் உபதேசமா..? பல்லிளிக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவு.

கருணாநிதியும் துரைமுருகனும் பகுத்தறிவு பகலவன் போன்று இந்து மக்களை மட்டுமே குறைகூறி பேசிக்கொண்டு இருப்பார்கள்.


அதேநேரம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் கண்டால் அன்பு மழை பொழிவார்கள். அந்த மதங்களில் இருக்கும் குற்றம், குறைகளை கண்டிக்கவும் மாட்டார்கள்.

அதேபோன்று தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கவைத்து, இந்தி கற்றுக்கொள்ளச் செய்வார்கள். அதேநேரம், தமிழர்கள் யாரும் இந்தி கற்றுக்கொள்வதை அனுமதிக்கவே மாட்டார்கள்.

வீட்டுக்கே வெளியே பகுத்தறிவு வேடம் போடும் இவர்கள், வீட்டுக்குள் ஆன்மிகப்புள்ளியாக வலம் வருகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்ததுதான். வீட்டைவிட்டு வெளியே வரும்போது மட்டும் திருநீறை அழித்துக்கொண்டு வரும் இவர்களின் செயலை, துரைமுருகனின் மகன் அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

ஆம், வீட்டில் நடைபெறும் ஒரு விழாவில் புரோகிதரை வைத்து மந்திரம் ஓதுவதுடன் மட்டுமின்றி பயபக்தியுடன் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் பயபக்தியுடன் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

அந்த படத்தில் துரைமுருகன் இருப்பது தெரியவில்லை என்றாலும், அவரும் நெற்றியில் பட்டையைப் போட்டு பயபக்தியுடன் ஒளிந்து நிற்பார் என்றே தெரிகிறது. இன்னும் எத்தனை காலம்தான் தமிழக மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்களோ…