டெல்லியில் பிச்சை எடுத்தனர் ஓபிஎஸ்-இபிஎஸ்! ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்ட ரகசியம்!

மோடி எதிர்ப்பலையினால் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது என்று ஒட்டுமொத்த தமிழகமும் சொல்லிவந்த நேரத்தில், அதற்கு மாற்று கருத்து தெரிவித்த ஒரே மேதாவி துக்ளக் பத்திரிகை ஆசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி.


அதாவது, அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பாக தமிழகம் இருப்பதாலே இங்கு பா.ஜ.க. தோற்றுப்போனது என்று புதிதாக சில புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டியிருந்தார். ஆடிட்டருக்கு கணக்குக் காட்டுவதற்கு சொல்லியா தர வேண்டும்.

இந்த நிலையில் துக்ளக் இதழில் அ.தி.மு.க.வுக்கு மந்திரி பதவி இல்லை என்பதை குறிக்கும் விதமாக குதர்க்கமாக ஒரு படம் வெளியிட்டிருக்கிறார் குருமூர்த்தி. அதாவது கல்யாண சாப்பாடு போன்று உள்ளே பந்தி நடப்பதாகவும், ஜன்னல் வழியே பிச்சைக்காரர்கள் போன்று எடப்பாடி, பன்னீர் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அதைப் பார்த்தபடி, ‘உஷ் யாரும் அழக்கூடாது. நம்மளை எல்லாம் உள்ளே கூப்பிட மாட்டாங்க. கடைசியா ஏதாவது மீந்துன்னா கொடுப்பாங்க, அப்ப சாப்பிடலாம்’ என்று கமென்ட் போட்டிருக்கிறார். இத்தனை கேவலமாக அ.தி.மு.க.வை திட்டிய பிறகும் அந்தக் கட்சியுடன் உறவு வேண்டுமா என்று பலரும் எடப்பாடிக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எப்போதும் போல் அமைதியாக இருக்கிறார் எடப்பாடி.

என்னப்பா ஜெயக்குமார் வம்பு வந்திருக்கு, விட்றாதே...