பட வாய்ப்புக்காக பிரபல இயக்குனருடன் முத்தக்காட்சி ரிகர்சல்! ரகசியங்களை வெளியிடும் இளம் நடிகை!

மும்பை: முத்த காட்சி ஒன்றில் நடிப்பதற்காக, தன்னை டைரக்டர் ஒருவர் பாலியல் ரீதியாகச் சீண்டினார் என்று, நடிகை ஜரீன் கான் புகார் கூறியுள்ளார்.


பாலிவுட் நடிகை ஜரீன் கான், 2010ம் ஆண்டு ரிலீசான வீர் என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததன் மூலமாக பிரபலமானார். இவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ''எனது கேரியரின் தொடக்கத்தில் டைரக்டர் ஒருவர் முத்தக்காட்சியில் நடிப்பதற்காக ரிகர்சல் பார்க்கச் சொன்னார்.

ஆனால், அது எனக்கு மிக புதிய அனுபவம் என்பதால் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். முத்தக் காட்சிக்கு ரிகர்சல் பார்ப்பதா, என நான் கேட்டபோது, அவர் என்னை கிண்டல் செய்ததோடு, இதில் நடித்தால்தான் சினிமாவில் வளர முடியும், என்றார். வேறு வழியின்றி அவருடன் நானும் முத்தக் காட்சிக்கு ரிகர்சல் செய்தேன்,'' என்று தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையே, வயிற்றில் தையல் காயங்கள் தெரிய புகைப்படம் ஒன்றை எடுத்து, சமூக ஊடகங்களில் ஜரீன் கான் பதிவிட, அதனை பலரும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால், ஜரீனுக்கு, அனுஷ்கா ஷர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''ஜரீன் நீங்கள் அழகாக, வீரமாக, வலிமையாக உள்ளீர்கள், உங்களது அழகு உடல் காயங்களை தாண்டியது,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள ஜரீன் கான், ''விமர்சனங்கள்தான் வாழ்வில் வளர பாதை அமைத்து தருகின்றன,'' என தெரிவித்துள்ளார்.