ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக இருக்கும் சீமான் காதலி நடிகை! ரூ.1 லட்சம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த நடிகர்!

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபல நடிகர் மீதுபுகார் எழுந்தது.


தமிழில் பிரன்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலெட்சுமி. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் அண்ணியாக நடித்து அசத்தியவர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் விஜயலட்சுமி. இந்த நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் தனது சொந்த ஊரான பெங்களூருவில் தற்போது வசித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். செலவுக்கு கூட பணம் இல்லை என்று அவரது சகோதரர் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில் நடிகர் ரவி பிரகாஷ் நடிகை விஜயலட்சுமியை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்தோடு ஒரு லட்சம் ரூபாய் பண உதவியும் செய்துள்ளார் ரவி பிரகாஷ்.

இந்த நிலையில் மருத்தவமனையில் தனக்கு பண உதவி செய்த பிறகு ரவி பிரகாஸ் தினமும் தன்னை பார்க்க வந்ததாக கூறினார். அப்போது தான் படுத்த படுக்கையாக இருந்த தன்னை தொடக் கூடாத இடத்தில் எல்லாம் ரவி பிரகாஷ் தொட்டதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தனக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியதாகவும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரவி பிரகாஷ் வேறு யாரும் இல்லை. கன்னட திரையுலகில் முக்கிய குணசித்திர நடிகராக இருப்பவர் தான்.