உயிருக்கு போராடும் நடிகை விஜயலட்சுமி! காரணம் சீமான்! அதிர்ச்சி தகவல்கள்!

பிரண்ட்ஸ் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவரும் ஒரு காலத்தில் சீமானின் காதலியுமாக இருந்த நடிகை விஜயலட்சுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.


2001ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஃபிரண்ட்ஸ். இப்படத்தில் விஜய்சூர்யா ஆகியோருடன் சேர்ந்து நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் கன்னட திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

 

பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இதையடுத்து பத்தாண்டுகள் கழித்து பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருந்தார்.

 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் வெளியான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருந்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

 

பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா என பாஸ் என்கிற பாஸ்கரனில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் விஜயலட்சுமி. தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

 

அண்மையில் இவருக்கு உடல்நலக்குறைவு தீவிரமடைந்ததை அடுத்து பெங்களூரில் உள்ள மல்லையா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சி யு எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். ரத்த அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 தனது சகோதரி விஜயலட்சுமிக்கு உதவுமாறு அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தங்களது தாயின் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதால் தங்களிடம் பணம் இல்லை என்பதால், விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு உதவுமாறு திரையுலகினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

 

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டுவாக்கில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதன்படி தன்னை திருமணம் செய்து கொள்வதாக பழகி சீமான் ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

மேலும் சீமானுடன் தான் ஒன்றாக வசித்ததற்கு ஆதாரம் என்று கூறி சில புகைப்படங்களையும் விஜயலட்சுமி வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சீமான் மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அதன் பிறகு விஜயலட்சுமி மாயமானார்.

 

இதற்கிடையே மதுரையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. ஆனால் விஜயலட்சுமி சீமான் விவகாரத்திற்கு பிறகு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தனக்கு உடல் நிலை இப்படி ஆனதற்கு சீமான் ஏமாற்றியது தான் காரணம் என விஜயலட்சுமி கூறி வருகிறாராம்.