தெய்வமகள் என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் வாணிபோஜன்.
பிடிச்சாலும் புளியங் கொம்பா பிடிச்ச வாணி போஜன்! பொறாமையில் சக நடிகைகள்!

இவரை சின்னத்திரை நயன்தாரா என பலரும் கூறுவது வழக்கம். மேலும் kings of comedy juniors இந்நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றனர் வாணிபோஜன்.
இந்நிலையில் சின்னதிரையைத் தாண்டி வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இவர் நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகர் வைபவ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வாணி.
இந்நிலையில் கோலிவுட்டில் அறிமுகமான கையோடு டோலிவுட்டிலும் அறிமுகமாக ஆயத்தமாகி வருகிறார் வாணி போஜன். இவர் அறிமுகமாகும் இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் விஜய் தேவர்கொண்டா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் இயக்குனர் தருண்கோபிக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார். வாணி இந்த படத்தினை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குனர் சமீர் இயக்கி வருகிறார் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து வெள்ளித் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.