குடிப்பேன், கூத்தடிப்பேன்! பிரபல நடிகரின் மனைவி பிரதமர் மோடிக்கு கூறிய அதிர வைக்கும் பதில்!

நடிகை டிவிங்கிள் கன்னா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 44 வயது ஆகிறது. ஒரு காலத்தில் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர்.


அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். இவர் தனது அழகான உடல் வழைவையும் அற்புதமான அம்சங்களுடனும் அந்தகால இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் இவர்.  பின்னர் தனது 28 ஆவது வயதில் நடிகர் அக்ஷய் குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவரது கணவர் அக்ஷய் குமார் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு டிவி நிகழ்ச்சிக்காக உரையாடல் நடத்தினார்.

அப்போது நரேந்திர மோடி அக்ஷய் குமாரிடம் அவரது மனைவியை பற்றி பேசியிருக்கிறார். மேலும் அவரது மனைவி ட்விங்கில் கன்னாவிற்கு பாரதிய ஜனதா கட்சி மீது  வெறுப்பு எனவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இதனை பார்த்த நடிகை டிவிங்கிள் கன்னா மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்,

 நான் எந்த பார்ட்டியையும் எப்போதும் சப்போர்ட் செய்ததில்லை. எந்த கட்சிக்கும் விளம்பரம் செய்வதில்லை. நான் விரும்புவதெல்லாம் ஒரே ஒரு பார்ட்டி தான். இரவு முழுவதும் வோட்கா அடித்து விட்டு அடுத்த நாள் திக்கு தெரியாமல் இருக்க வேண்டும் அந்த பார்ட்டி தான் எனக்கு பிடிக்கும் என்று நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்