சூரரைப் போற்று! சூர்யாவின் புதிய படத்திற்கு வித்தியாசமான பெயர்! அப்டினா என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்ற படத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் இதனையடுத்து தனது 38 வது படத்தில் இறுதிச்சுற்று பட இயக்குனரான சுதா கொங்காரவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பற்றிய அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசல் புரசலாக வெளிவந்தது. 

இந்த இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘சூரரைப் போற்று’ என்று பிரம்மாண்டமாக தமிழில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சர்வம் தாளமையம் படத்தில் அபர்னா பாலமுரளி சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா இணை தயாரிப்பாளராக சேர்ந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. சூரர் என்றால் ஆதித் தமிழர் என்று பொருள். எனவே ஆதிப் தமிழரை புகழ வேண்டும் என்கிற பொருளில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.