அந்த எண்ணத்தோட என் பக்கத்துல வருவாங்க..! ஆனால்..! வளரும் நடிகை பகிர்ந்து கொண்ட திரையுலக அனுபவம்!

என்னதான் சரியாக நடித்தாலும் வாய்ப்புகள் வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு தற்போது 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


மேகா படத்தில் வரும் புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை பாடலின் ரிமிக்ஸ்) பாடலில் வந்த சிருஷ்டி அவ்வளவு எளிதாக ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம் அந்த பாடலில் அவர் சிரிக்கும்போது கன்னத்தில் ஏற்பட்ட குழிதான். 

குழந்தை சிரிப்பு, காதல், சோகம், கோபம் எல்லாவற்றையும் எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள் என சிருஷ்டி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானபோது அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது 'ராஜாவுக்குச் செக்' மற்றும் 'கட்டில்' என பெயரிடப்பட்டுள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் சிருஷ்டி.  

எந்த கேரக்டரில் நடித்தாலும் தன்னுயை நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் சிருஷ்டிக்கு சரியான பட வாப்புகள் கிடைக்காமல் போனது ஏனோ? மேலும் அவர் தற்போது நடித்து வரும் கட்டில் என்ற படம் முழுக்க முழுக்க குடும்பத்தின் பின்னணியை கொண்ட திரைப்படம். குடும்ப உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப்போராட்டங்களை அடிப்படையாக கொண்டது இந்த கட்டில் படம்.

இந்த படத்தில் சிருஷ்டி ஒரு இல்லத்தரசியாக நடிக்கிறார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை ரோல் மாடலாத்தான பார்க்கிறார் சிருஷ்டி. ஒரு நடிகைக்கு இங்க வாய்ப்பு கிடைக்கிறதுல நிறைய சிக்கல் இருக்கும் என கூறும் சிருஷ்டி வாய்ப்பு கிடைப்பதற்காக நிறைய பிரச்னைகளைச் சந்தித்திருப்பதாக சொல்கிறார்.

மேலும் தன்னிடம் அந்த மாதிரி பேச முயற்சித்தாலே உடனே எதிர்ப்பை காண்பித்து விடுவேன் என தெளிவாக கூறுகிறார் சிருஷ்டி.