கொழுந்தன் தனுஷ் எனக்கு முதுகு தேய்த்து விட்டது தான் ரொம்ப பிடிக்கும்! சோனியா அகர்வால் வெளியிட்ட ஷாக் தகவல்!

நடிகர் தனுஷ் தனக்கு முதுகு தேய்த்து விட்டது குறித்து அவரது முன்னாள் அண்ணி சோனியா அகர்வால் வெளியிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


நடிகை சோனியா அகர்வால் தற்போது தனிமை என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருந்த சோனியா அகர்வால் தற்போது வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில்தான் தனிமை என்கிற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் சோனியா.

தனிமை திரைப்படத்தை விளம்பரப் படுத்தும் நோக்கில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்ற நடிகை சோனியா அகர்வால் பேசினார். அப்போது அவரிடம் இதுநாள் வரை நடித்ததிலேயே தங்களுக்கு பிடித்த காட்சி எது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தனக்கு முதுகை தேய்த்து விட்டுக் கொண்டிருப்பார் அப்போது அவரை பிரச்சனையை சந்திக்க வைக்க ஒரு திட்டம் தீட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் நடிகர் தனுஷ் எனக்கு முதுகு தேய்த்து விட்டுக் கொண்டே இருப்பார் அப்போது நான் பேசிக் கொண்டே இருப்பேன். அது தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.