எனக்கு சரக்கடிக்க மிகவும் பிடிக்கும்..! விஸ்கி என்றால் ஒரே மடக்..! கமலின் மூத்த மகள் உடைத்த சீக்ரெட்!

டெல்லி: நடிகை ஸ்ருதி ஹாசன், தனக்குள்ள ஆல்கஹால் போதைப்பழக்கம் மற்றும் காதல் பிரேக் அப் விசயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.


லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் 'Feet Up with the Stars Telugu' என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார். அப்போது அவர், ''ஒரு காலத்தில் நான் விஸ்கி குடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன். ஒருகட்டத்தில் அதனை நிறுத்த முடிவு செய்தேன்.

இதற்காக, நான் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று விஸ்கி பழக்கத்தை கைவிட்டேன். எனது நண்பர்கள் நான் விஸ்கி குடிப்பேன் என்றே இன்னமும் நினைக்கிறார்கள். இது நான் வெளியில் சொல்லாமல் கைவிட்ட ஒரு நல்ல விசயமாகும். நான் மிக கூலான ஆள். மேலும் ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடிய ஆள்.

என்னால் உணர்ச்சியை சரிவர கையாள தெரியவில்லை. அதனால்தான், காதலில் பிரேக்அப் ஏற்பட்டது. அது ஒன்றும் சினிமாவில் வருவதுபோன்ற காதல் கிடையாது. நாங்கள் இருவருமே சினிமா துறையில் உள்ளவர்கள் என்பதால், எங்களின் அனுபவத்தை எளிதில் புரிந்துகொண்டு, விலக நேரிட்டது,'' என ஸ்ருதி ஹாசன் பேசினார்.