காதலனை ஸ்ருதி கழட்டிவிட்டது ஏன்! சற்று முன் வெளியான ஷாக் தகவல்!

சென்னை: ஸ்ருதிஹாசனின் காதல் திடீர் பிரேக்அப் ஆகியுள்ள செய்தி, கோலிவுட்டில் பரபரப்பான விசயமாக பேசப்படுகிறது.


கமல்ஹாசனின் மகள் என்றாலும், தனக்கென தனித்துவமான நடிப்பு, பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர் ஸ்ருதிஹாசன். இவர், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்ற இளைஞரை காதலித்து வந்தார். 2017ம் ஆண்டு முதல் இவர்களுக்கு இடையே காதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூட ஸ்ருதியும் அவரது வெளிநாட்டு காதலரும் ஒன்றாகக் கலந்துகொண்டார்கள். அப்போது மைக்கேல் கார்சென் வேட்டி, சட்டையிலும், ஸ்ருதி பட்டுப்புடவையிலும் பார்ப்பதற்கு, காதலர்கள் போல வந்திருந்தனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஸ்ருதிஹாசன், புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. கார்செல்லை திருமணம் செய்யப் போவதால், நடிப்பில் இருந்து ஸ்ருதி விலகியுள்ளதாக, தகவல் கூறப்பட்டு வந்தது. ஆனால், திடீரென எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புதிய படம் ஒன்றில், கடந்த வாரம் ஸ்ருதி கமிட்டாகி, நடிக்க தொடங்கிவிட்டார். இப்படி திடீரென அவர் மனமாற்றம் அடைய என்ன காரணம் என, கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் 26ம் தேதி மைக்கேல் கார்செல் அதிரடியாக ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அது பார்ப்பதற்கு மேலோட்டமாக இருந்தாலும், யாருக்கோ மெசேஜ் சொல்வதைப் போல இருந்தது. ஆம். அதில், இந்த வாழ்க்கை எங்களை எதிரெதிர் துருவத்தில் நிறுத்தி, தனித் தனி பாதையில் பயணிக்கச் சொல்கிறது. ஆனாலும், இந்த இளம்பெண் இனி என் வாழ்வின் மிகச்சிறந்த நண்பராக நீடிப்பார், என்று மைக்கேல் கூறியிருந்தார். 

உண்மையில், நாடக நடிப்பு, இசை போன்றவற்றில் சாதிப்பதற்காக, மிலிட்டரி வேலையை துறந்துவிட்டு, போராடி வருகிறார் மைக்கேல். அவருக்கேற்ற நல்ல வாய்ப்பு எதுவும் இதுவரை அமையவில்லை. இதனால், தனது மாதாந்திர செலவுக்கு, பெற்றோர் மற்றும் ஸ்ருதிஹாசனை எதிர்பார்க்கும் நிலையில் மைக்கேல் உள்ளாராம். இது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லையாம். லண்டனில் தனக்கே சொந்த வீடு உள்ளபோது, தனது காதலன் எதிலும் சாதிக்காமல் வலம் வருவது ஸ்ருதியை அப்செட்டாக்கியுள்ளது. 

இதுதவிர, உச்சக்கட்டமாக, மாதா அமிர்தானந்தமயி மடத்தில், சீடராக மைக்கேல் சமீபத்தில் சேர்ந்துள்ளார். இதுதான், ஸ்ருதியை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. உடனடியாக பிரேக்அப் என அறிவித்துவிட்டு, சென்னைக்கு மூட்டை முடிச்சுடன் கிளம்பி வந்துவிட்டாராம்...