அஜித் இப்படிப்பட்டவரா? ஸ்ரீரெட்டி வெளியிட்ட திடுக் தகவல்! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தல அஜித் குறித்து தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.


தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, சக நடிகர்கள், இயக்குனர்கள், மீது அதிரடியாகப் பாலியல் புகார் கூறி, சர்ச்சையை கிளப்பியவர். இதற்காக, பலரால் பாராட்டப்பட்டாலும், கடும் விமர்சனத்திற்கும் அவர் ஆளாகியுள்ளார். இந்நிலையில், ஸ்ரீரெட்டி, தற்போது, ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகர் அஜித்தை பாராட்டி, அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழகத்தின் நம்பர் 1 ஹீரோ அஜித். அவரது புகைப்படத்தை பார்க்காமல் எனக்கு உறக்கமே வராது. அனைத்து விதமான சர்ச்சைகளில் இருந்தும் அவர் விலகியே இருக்கிறார். நல்ல குடும்பஸ்தனாக வலம் வருகிறார்.

அவர், தனது ரசிகர்களை நேசிக்கிறார். நல்ல கணவனாக, தந்தையாகவும் செயல்படுகிறார். என்னைப் போன்ற பல பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வனாக அஜித் உள்ளார். உங்கள் காலடியில் என் இதயத்தை வைக்கிறேன் தல'', என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவுக்கு, அஜித் ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கும் அதே சூழலில், விஜய் ரசிகர்கள், உடடினயாக பதிலடி கொடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பலவிதமாக, அஜித்தையும், ஸ்ரீரெட்டியையும் திட்டி அவர்கள் பதிவிட்டும் வருகின்றனர். எனினும், இதுபற்றி ஸ்ரீரெட்டி எந்த மறுப்பும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.