படுக்கைக்கு அழைத்தார் அந்த விஜய் பட இயக்குனர்! இளம் நடிகை பகீர் தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான ஷாலு சாமு ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களில் சப்போர்டிங் வேடங்களில் நடித்து உள்ளார்.


நடிகை ஷாலு  இன்றையதினம் வெளியிட்ட தகவல் ஒன்று தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் ஷாலு பேசப்படும் நடிகையானார்.

ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இதற்காக ஷாலுவை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்ததாக இயக்குனர் மீது நடிகை புகார் கூறியுள்ளார்.

இயக்குனர் ஆசைக்கு இணங்காததால் நடிகர் விஜய் தேவர்கொண்டா திரைப்படத்தில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் கூறினார். இந்த செய்தியை ஷாலு தன்னுடைய ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் சேட் செய்த போது, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார். 

நடிகை ஷாலு "மீ டூ" புகாரை முன்வைப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இருப்பினும் அவர் அந்த இயக்குனர் பெயரை கூறவில்லை. தொடர்ந்து இது போன்ற புகார்கள் திரையுலகில் எழுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது  என்றே கூறலாம். 

ஆனால் விஜய் தேவரகொண்டா பெயரை கூறியுள்ளாதால் அவரது படத்தை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் ஷாலுவை கட்டிலுக்கு அழைத்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.