அடங்கிய தகாத உறவு மேட்டர்..! அடங்காத மகாலெட்சுமி..! காரணம் இதுதான்..!

நடிகர் ஈஸ்வருடன் தம்மை தொடர்பு படுத்தி பேசி வரும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீரியல் நடிகை மகாலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான மகாலட்சுமி அதை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மகாலட்சுமிக்கும் தன்னுடைய கணவரும் நடிகருமான ஈஸ்வருக்கும் முறையற்ற உறவு இருப்பதாக நடிகை ஜெயஸ்ரீ குற்றம்சாட்டினார். மேலும் கணவரை பிரிந்து வாழும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள தன்னை துன்புறுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து ஈஸ்வர் திருவான்மியூர் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார்.  

இதற்கிடையே ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மீது நடிகை மகாலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அசோக் நகரில், பெற்றோர் மற்றும் நான்கு வயது மகனுடன் மகாலட்சுமி வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கணவர் அனிலை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் 'தேவதையை கண்டேன்' உள்ளிட்ட சீரியல்களில் ஈஸ்வருடன் நடித்துள்ளேன். அப்போது எடுத்த புகைப்படங்களை வைத்து தன்னைப் பற்றி ஈஸ்வரின் மனைவி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். எனக்கும் ஈஸ்வருக்கும் எந்த தகாத உறவும் இல்லை. எனவே என் மீது அவதுாறு பரப்பிய ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.