திடீரென 102 கிலோவான சூர்யா நாயகி! பகீர் காரணம் வெளியானது!

வாரணமாயிரம் என்னும் ஒரே ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது 34 வயதாகிறது.


இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 2002 முதல் படங்களில் நடித்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி என அனைத்து மொழிகளிலும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2013 வரை படங்களில் நடித்த இவர் 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 இந்நிலையில் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் தாயாக உள்ளார் சமீரா ரெட்டி. தான் தாயாக உள்ளதை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் சமீரா ரெட்டி. இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது….

 நான் எனது முதல் மகன் பிறந்த பின்னர் அதிகமாக குண்டாகிவிட்டேன். வெறும் 65 கிலோ இருந்த எனது உடம்பு 102 கிலோவிற்கு மாறியது. இதனால் பெரும் மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி