ப்ளீஸ் அவர ஜெயிக்க வச்சிடுங்க! அவர் ரொம்ப நல்லவர்! வேட்பாளருக்கு நடிகை சமந்தா திடீர் வக்காலத்து!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை சமந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.


கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரவேற்பைப் பெறுவதுண்டு. அந்த வகையில் நடிகை சமந்தா ஆந்திர மாநிலம் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக  ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில் ஆந்திரா, சிக்கிம் மற்றும் ஒடிசாவின்  சில சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது

இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வும் வேட்பாளருமான அனகானி சத்ய பிரசாத்துக்கு  வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு நடிகை சமந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். 

அனகானி சத்ய பிரசாத் தனது குடும்ப நண்பர் என்று தெரிவித்துள்ள சமந்தா, தான் ஐதராபாதில் குடியேறியதில் இருந்து அனகானி சத்ய பிரசாத்தின் தங்கையை தனக்கு தெரியும் என்றும், மேலும் அவர் நல்ல மனிதர் என்றும் சமந்தா கூறியுள்ளார்.