மப்பும் மந்தார உடலை கட்டு மஸ்தாக மாற்றிய சமந்தா! திடுக் காரணம்!

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா.


இவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தற்போது திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தா நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

 சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவரது கேரக்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான மற்றும் அம்சமான உடற்கட்டை வெளிக்காட்டுவது போல் புகைப்படங்களை வெளியிடுவார்.

 இந்நிலையில் ஜிம்மிற்கு சென்று உழைத்து கிட்டத்தட்ட தனது வயிற்றில் சிக்ஸ் பேக்கை உருவாக்கியுள்ளார் சம்மு. அப்படியாக மேல் ஆடை மட்டும் அணிந்து தனது சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வருகின்றனர்.