மின்னல் வேகத்தில் பரவும் சமந்தாவின் தாய் புகைப்படம்! ஏன் தெரியுமா?

நடிகை சமந்தா சென்னையைச் சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் சமந்தா ருத் பிரபு.


இவருக்கு தற்போது 32 வயதாகிறது. சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தற்போது ஆந்திராவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தனது இளமைக் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தனது தேவைகளை தானே செய்து வளர்ந்தவர் .இவர் மாடலாக இருந்த போது ஒரு சில நாட்களில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் கடினமாக உழைத்து வளர்ந்தவர் சமந்தா.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதர்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதனால் தனது அம்மாவை நினைவுகூர்ந்த, சமந்தா முதன்முறையாக அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  சமந்தாவின் அம்மா ஒரு மலையாளி ஆவார். அவரது தந்தை ஒரு தெலுங்கு மொழி பேசக் கூடியவர். அவர் மேலும் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக ஒரு பதிவினை செய்துள்ளார்.

 சமந்தா இதுகுறித்து அவர் பதிவு செய்ததாவது.  என்னுடைய தாயின் பிரார்த்தனைகள் எப்போதும் எனக்கு உதவி இருக்கிறது. அது மேஜிக் போன்றது .நான் இப்போதும் கூட அவரிடம் சென்று எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்பேன் கண்டிப்பாக அவர் செய்வது எனக்கு பலனளிக்கும். உண்மையில் அம்மாக்கள் உலகில் கடவுளை விட மேலானவர்கள் என்று பதிவு செய்துள்ளார் சமந்தா.