நோ அட்ஜஸ்ட்மென்ட்! கறார் காட்டும் சாய் பல்லவி! டென்ஷனில் ஹீரோ!

பிரேமம் என்னும் ஒரே ஒரு படத்தின் மூலம் மிகப் பெரும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவருக்கு தற்போது 26 வயதாகிறது.


இவர் கோத்தகிரியை சேர்ந்தவர். இவரது முழுப்பெயர் சாய் பல்லவி செந்தாமரை என்பதாகும். பிரேமம்  படத்திற்கு பின்னர் மிகப்பெரும் பிரபலமான இவர் தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்

 தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் தற்போது மாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூர்யாவின் என் ஜி கே படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் பாகுபலி படத்தின் வில்லன் ராணாவின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய்பல்லவி.

 ‘விராட பாவம் 1992’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இன்னும் படத்தின் படபிடிப்பு தொடங்கவில்லை. ஆனால் இப்போதே நடிகை சாய் பல்லவி தனக்கான சூட்டிங் தேதிகள் எப்போது வரும் என சரியாக குறித்து கொடுக்குமாறு பட தயாரிப்பாளரிடம் கேட்டு வருகிறாராம். இல்லை எனில் படத்தை விட்டு விலகுவதாகவும் அவர்களை மிரட்டி வருகிறாராம்.

 சாய் பல்லவி தெலுங்கு படங்களில் நடிக்கும்போது பல நடிகர்களுடன் சண்டையிட்டுக் கொண்டும் தனது ஒரு மாதிரியான ஆணவத்தை காட்டிக் கொண்டும் இருப்பது சமீப காலங்களாக செய்தியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.