ராத்திரி! சிவ ராத்திரி! தூக்கம் பேச்சே நடிகையா இது? பிட்னெஸ்சை அப்படியே மெயின்டெய்ன் பண்றாங்க!

சென்னை: நீண்ட நாளாக திரை உலகில் இருந்து ஒதுங்கியிருந்த ரூபிணியின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.


1980களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரூபிணி. இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. குறிப்பாக, கமல் ஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவர் நடனமாடிய சிவராத்திரி என்ற பாடல் தற்போதும் பலரால் ரசிக்கப்படுவதாக உள்ளது.

அந்த அளவுக்கு இளமையாக வலம் வந்த ரூபிணி, கடந்த 2000ம் ஆண்டு மோகன் குமார் ராயணா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் நடிப்பதை முழுதாக நிறுத்திக் கொண்டார்.

ஆனால், 2005ம் ஆண்டே கருத்து வேறுபாடு காரணமாக, மோகன் குமாரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது, இவருக்கு அனிஷா என்ற ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்களில், ரூபிணி வயதான தோற்றத்தில் காணப்படுகிறார்.

ஒரு காலத்தில் தேவதை போன்ற அழகுடன் ரசிகர்களை கட்டிப் போட்ட ரூபிணி தற்போது வயதான நிலையில் இருப்பதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் அந்த ரூபிணியா இவர் எனப் பலர் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.