ரேட்டை திடீரென உயர்த்திய நடிகை! அதிர்ச்சியில் கார்த்தி! ஏன் தெரியுமா?

கீதா கோவிந்தம் படம் நடிகை ராஷ்மிகா மண்டானா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.


சலோ திரைப்படத்தின் மூலம் இந்திய திரை உலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

துள்ளலான இசை, காமெடி கலந்த காதல் திரைப்படமான கீதா கோவிந்தம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் காரணமாக நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கு திரையுலகில் மவுசு கூடியுள்ளது. விஜய் தேவர கொண்டவுடன் மீண்டும் ஒரு படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை மாதத்தில் வெளியாகிறது.

இந்த படங்களில் தனது ஊதியமாக அந்த நடிகை பெற்றது 40 லட்சம் ரூபாய். ஆனால் தொடர் வெற்றிகள் காரணமாக தனது சம்பளத்தை அவர் 80 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி உள்ளார். அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.

ஆனால் சாய்பல்லவி ஒப்புக் கொள்ளாததால் அவரது இடத்தில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கு அவர் 60 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை கேட்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரை மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ரவிபுடி திட்டவட்டமாக உள்ளார். தமிழிலும் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். 

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது 40 லட்சம் ரூபாய் ராஷ்மிகாவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. தற்போது ரேட்டை திடீரென ராஷ்மிகா உயர்த்தியுள்ளதால் இந்த படத்திற்கும் கூடுதல் சம்பளம் கேட்பாரோ என்று கார்த்தி படக்குழு பதை பதைப்பில் உள்ளதாம்.