நடிகர் விஜய்க்கு உதட்டில் முத்தம்! செம ஹாட் காட்சியில் நடித்த நடிகை ராஷ்மிகா!

தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவர கொண்டா ஆகியோர் சமீபகாலமாக இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வருகின்றனர்.


இதற்கு முன்னதாக நடித்த கீதகோவிந்தம் படம் நல்ல ஹிட் ஆனது. இந்த படத்திலும் லிப் கிஸ் அடித்து இருந்தனர். தற்போது இருவரும் நடித்துள்ள டியர் கேம்ராட் படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரில் இருவரும் மழையில் நனைந்தபடி லிப் லாக் கிஸ் அடித்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்ச்சை கிளம்பியது. தற்போது இது குறித்து ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.

நான் அந்த கேரக்டரில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்துள்ளேன். கிஸ் அடிப்பது கட்டிப்பிடிப்பது பெரிது இல்லை. அந்த கேரக்டர் என்ன கேட்கிறதோ அதை செய்ய வேண்டும். அந்த ஒரே ஒரு சீனை மட்டுமே பார்த்துவிட்டு படத்தை நாம் மதிப்பிடக்கூடாது.

கீதா கோவிந்தம்  படம் மக்களுக்கு பிடித்திருந்தது. அதேபோல் இந்த படமும் அவர்களுக்குப் பிடிக்கும் என்று கூறியுள்ளார். படத்தை விட இரண்டு பேரின் லிப் லாக் தான் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.