நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் ஆகும் புகைப்படங்கள்!

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என, ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். வயது தெரியாமல் சிக்கென தோற்றமளிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு, டீன் ஏஜ் வயது முதல் முதியவர்கள் வரை பல தரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணனுக்கு, கடந்த 2003ம் ஆண்டு தெலுங்கு சினிமா இயக்குனர் கிருஷ்ணா வம்சியுடன் திருமணமானது. அதன்பின், அவரது குடும்ப வாழ்க்கை பற்றி அவ்வளவாக வெளியில் தகவல் தெரியாமல் இருந்து வந்தது. 

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன்,  தனது மகனையும் அழைத்து வந்துள்ளார். ரித்விக் என்ற அந்த சிறுவனைப் பார்த்து, ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம், தற்போது 50 வயதை நெருங்கியுள்ள ரம்யா கிருஷ்ணனுக்கு, இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும், அவர் ஒரு கவர்ச்சிப் புயல் என்றும் ஏராளமான ரசிகர்கள் ஜொள் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டீன் ஏஜ் வயதில் அவருக்கு மகன் உள்ளார் என்று கூறினால், அதிர்ச்சியடையாமல் என்ன செய்வார்கள்?...