முத்தம்! படுக்கையறை! எல்லா காட்சிகளுக்கும் ஓகே! கார்த்தி-சூர்யா நாயகி தாராளம்!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.


தீரன் அதிகாரம் ஒன்று வெற்றியை தொடர்ந்த,  தேவ் படத்திலும் கார்த்தி, ரகுலுடன் ஜோடியாக நடித்தார் . இதே போல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் ரகுல் ப்ரீத் நடித்து வருகிறார்.

இது தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் தலா ஒரு படத்தில் ரகுல் நடித்து வருகிறார். அதாவது ஒரே நேரத்தில் ஐந்து பெரிய படங்களில் ரகுல் ப்ரீத் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

தற்போது ரகுல் ப்ரீத்  சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும், நடித்து இருக்கிறார்.  இந்த திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி வெளிவர காத்திருக்கிறது. ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகை ரகுல் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் பேசும்போது,  தன்னுடைய திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொணடார்.  மேலும் சூர்யாவின் குண நலன்கள் பற்றியும் அவர் மற்றவர்களுக்கு தரும் மரியாதை பற்றியும் பெருமையாக கூறினார்.

பின்னர் கவர்ச்சியான செக்ஸ் மற்றும் முத்த காட்சிகளில் நடிக்க நீங்கள் தயாரா? என்ற கேள்விக்கு ரகுல் "நமது ஊரில் இதனை பெரிதாக பார்க்கிறார்கள். மேலை நாடுகளில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை அவசியம் ஏற்பட்டால் கட்டாயம் கவர்ச்சி பாத்திரங்களிலும் செக்ஸ் காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடிக்க நான் தயார்" என்று கூறினார்.