முழு போதை! பொது இடத்தில் உதட்டோடு உதடு முத்தம்! வைரலாகும் நடிகையின் போட்டோ!

பொது இடத்தில் அனைவர் முன்னிலையிலும் நடிகை ஒருவர் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஆங்கில தொலைக்காட்சி தொடர் மூலமாக அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா மிகவும் பிரபலமாக உள்ளார்.

இவர் தன்னை விட சுமார் 10 வயது குறைவான நிக் ஜோனாசை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பிரியங்காவின் கணவர் நிக்கின் சகோதரர் விரைவில் தனது காதலியை மணக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு அமெரிக்காவின் பிவர்லி ஹில்சில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் நிக்கின் சகோதரர். இந்த விருந்தில் பிரியங்கா தனது கணவரான 10 வயது குறைவான நிக்குடன் பங்கேற்றார். விருந்தின் போது உற்சாக மிகுதியில் பிரியங்கா தனது கணவருடன் இணைந்து வயிறு முட்ட குடித்துள்ளார்.

இதனால் போதையில் ஹோட்டலை விட்டு வெளியேறிய நிக் ஜோனாஸ் – பிரியங்கா சோப்ரா தம்பதியினர் பொது இடம் என்று கூட பார்க்காமல் வரம்பு மீறினர். அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்ற போதும் பொது இடத்தில் பலர் முன்னிலையில்தனது கணவருக்கு பிரியங்கா கொடுத்த லிப் கிஸ் இந்தியாவில் வைரல் ஆகி சர்ச்சையாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒரு இந்திய பெண்மணி பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் பிரியங்கா தனது கணவர் மீதான அன்பின் வெளிப்பாடாக அந்த முத்தத்தை கொடுத்துள்ளதாகவும் ஆதரவுக்குரல்களும் எழுந்துள்ளன.