திருமணமே ஆகலை.. அதுக்குள் காதலனிடம் பெண் குழந்தை கேட்கும் பிரியா பவானி சங்கர்..! ஏன் தெரியுமா?

மேயாத மான், மான்ஸ்டர் , கடைகுட்டி சிங்கம் படங்கள் மூலமாக வெள்ளித்திரை க்குள் நுழைந்த பிரியா பவானிசங்கர்.ஆரம்பத்தில் செய்து வாசிப்பாளாராக அறிமுகமானவர்.


அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி யில் ' கல்யாணம் முதல் காதல் வரை ' சீரியல் மூலம் அவருக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதற்கிடையில் ஒரு பக்கம் நம்ம தமிழ்நாட்டு பசங்க பிரியா பவானி சங்கருக்காக உருகும் பட்சத்தில் அவருக்கன மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் போனது.

இதற்கிடையில் பிக் பாஸ் கவினுடனும் கிசு கிசுக்குபட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, சமீபத்தில் பிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய பதிவு போட்டிருந்தார். தனது கல்லூரி நண்பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர், நான் கல்லூரியில் இருந்த போது நீ காதலித்து விட, இன்று உடைந்து போன என்னை காதலிப்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது எனவும், எனது வானில் நீ சூரிய ஒளி, எனக்கு பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கும் உனை போல ஒரு ஆண் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் என இலை மறை காயாக வெளிபடுத்தினார்.

சமூக வலைதளத்தில் அவரது பதிவு ட்ரெண்ட் ஆனதை அடுத்து பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.