ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம்! கிடுகிடுவென ரேட்டைஏற்றிய பிரியா பவானி சங்கர்!

சீரியல்களில் இருந்து திரையுலகிற்கு வந்த பிரியா பவானி சங்கர் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.


மென்பொருள் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கர் பிறகு தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரானார். தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நட்சத்திர நியுஸ் ஆன்கராக வலம் வந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இவர் பிரபலமானார். பல்வேறு வீடுகளில் ஒரு அங்கமாக பிரியா பவானி சங்கர் மாறினார்.

இதனை தொடர்ந்து திரையுலகில் வாய்ப்புகள் தேடி வந்தது. மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார். தொடந்து எஸ்.ஜே.சூ ர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் கதாநாயகியாக கலக்கினார். கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் முறைப்பெண்ணாக மனதில் நின்றார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரபல ஜவுளிக்கடையான ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு பிரியா பவானி சங்கர் மாடல் ஆகியுள்ளார்.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடை விளம்பரங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதற்காக மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்த பிரியாவிற்கு ரூ.30 லட்சம் வரை சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குவதாக பேசிக் கொள்கிறார்கள்.