49 வயதில் காதல் கல்யாணம்! மகளையும் சம்மதிக்க வைத்த பலே நடிகை!

முன்னணி நடிகையாக திகழ்ந்த பூஜா பேடி தனது காதலனை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


1970ஆம் ஆண்டில் பிறந்தவர் நடிகை பூஜா பேடி. இவருக்கு தற்போது வயது 49. இவர் பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திர நடிகையாக இருந்தவர்.

 

பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போட்ட இவர் ஃபர்ஹான்  பர்னிச்சர் வல்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆலியா என்ற மகளும் உமர் என்கிற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாட்டால் 2003 ஆம் ஆண்டில் இந்த தம்பதி விவாகரத்து செய்து கொண்டது.

 

இந்த நிலையில் நடிகை பூஜா பேடிக்கு மேனக் கான்ட்ராக்டர் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பள்ளி பருவம் தொடங்கி நண்பர்களாக பழகி வந்தவர்கள். இருவருக்குமிடையே இடைவெளி இருந்து வந்த நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றில் மேனக் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

 

இதற்கு நடிகை பூஜா பேடி கருத்து பதிவிடவே மீண்டும் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியதுவெப்பக் காற்றினால் இயங்கும் பலூனில் பூஜா பேடியை அழைத்துச்சென்ற மேனக் தனது காதலை நடிகையிடம் வெளிப்படையாகக் கூறினார்

 

வானில் பறந்தபடி தனது காதலிக்கு வைர மோதிரத்தை பரிசு அளித்த மேனக் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார் நடிகை பூஜா பேடி

 

இதையடுத்து உலக காதலர் தினமான பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் இந்த ஆண்டுகளுக்குள்ளாகவே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர்.

 

தனது மகளின் படப்பிடிப்பு மற்றும் தனது மகனின் படிப்பு முடிந்தவுடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பாம்பே டைம்ஸ் நாளிதழுக்கு நடிகை பூஜா பேடி பேட்டி கொடுத்துள்ளார்.

 

தனது காதலர் மிகவும் திறந்த மனம் கொண்ட மனிதர் என்று அவர் பாராட்டியுள்ளார். தங்களது குடும்பம் இணைந்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நடிகை பூஜா பேடி, தனது பிள்ளைகளும் தனது காதலரை தங்களது குடும்பத்துடன் இணைத்துக்கொள்வதில் ஆசையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்